கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார்
இந்த நிலையில் இந்த தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சென்னை ராணிமேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மூடி சீலிடப்பட்ட இந்த அறையில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராணிமேரிகல்லூரிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உதயநிதி இன்று சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இராணி மேரி கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டேன்.மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் கழக முகவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்
அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் வழக்கறிஞர் ஜின்னா, வட்ட செயலாளர் அண்ணன் ஜி.வெங்கடேசன் உள்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.