Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத ஒன்று: அரக்கோணம் சம்பவம் குறித்து உதயநிதி டுவீட்!

Advertiesment
அரக்கோணம்
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:06 IST)
அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை குறித்த வழக்கில் நீதி விசாரணை வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்திருந்தார். 
அவரை தொடர்ந்து தற்போது தனது டுவிட்டரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:
 
அரக்கோணத்தில் நடந்த தேர்தல் மோதல் - சாதி மோதலாகி 2 உயிர்கள் பலியான சம்பவம் நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத ஒன்று. கட்சிகள் தம் வாக்குறுதி-திட்டங்களை சொல்லித்தான் தேர்தலை சந்திக்க வேண்டும். சாதிய வன்மத்தை வெளிப்படுத்தி தேர்தல் நடைமுறையை வன்முறைக்களமாக்குவது கண்டனத்துக்குரியது.
 
இழந்த உயிர்களை எதைக்கொண்டும் மீட்டிட முடியாது. இருந்தாலும் இறந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுப்பதுடன், இனி இதுபோன்ற சாதிய மோதல் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுபடுவதே தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!