அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து சில பள்ளிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டு வருகிறார்.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஆனைமலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளிக்கு பார்வையிட சென்ற போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அவர்கள் பள்ளிக்குள் நுழைந்தபோது அப்போது வெளியே சென்றுகொண்டிருந்த சிறுவன் அவர்களைப் பார்த்ததும் உடனடியாக பள்ளிக்குள் சென்றான். அதைப்பார்த்த அமைச்சர் அவனை அழைத்து விசாரித்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவ, கட் அடித்துவிட்டு ஆசிரியரிடம் மாட்டினாலும் பரவாயில்லை அமைச்சரிடமே மாட்டிக்கொண்டானே என மீம்ஸ்கள் பரவ ஆரம்பித்துள்ளன.