Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வருக்கு நன்றி கூறிய உதய நிதி

முதல்வருக்கு நன்றி கூறிய உதய நிதி
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (16:22 IST)
அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ள முதல்வருக்கு நன்றி என எம்.எல்.ஏ உதய நிதி தெரிவித்துள்ளார்.
 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் இந்த தீர்ப்புக்கு, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 
இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி இது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

இந்த கூட்டத்தில் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளதுடன் அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளார்.

இதுகுறித்து, எம்.எல்.ஏவும்  நடிகருமான உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’பிற்படுத்தப்பட்ட-பட்டியல்-பழங்குடி மக்களுக்கான உரிமைகளை காக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒன்றியஅரசு தொடர்ந்து செயல்பட்டுவரும்நிலையில், அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாலுமே பெண் குழந்தை; ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்ட விவசாயி தற்கொலை!