அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை சக அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த  சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.
 
									
										
			        							
								
																	முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ள நிலையில், ஓராண்டிற்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான  உதய நிதி கடந்த 14 ஆம் தேதி,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியேற்றார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறிய நிலையில் தன் பணியைத் திறம்பட செய்து வருவதாக மூத்த அமைச்சர்கள் கூறினர்.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மேடையில் பேசும்போது,  அமைச்சர் உதய நிதி துணை முதல்வருக்கு நிகரான வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.