சாலையோரக் கடைகள் விதிமுறைகள் மீறி வைத்திருந்தாலும் அதற்குச் சட்டப்படி நடக்க வேண்டும். இதற்கு மாறாக மனிதநேயமற்று நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நேற்று வாணியம்பாடியில் உழவர்சந்தை அரிகில் உள்ள சிஎல் சாலை பகுதியில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விதிமுறைகள் மூறி தள்ளுவண்டிக்கடைகள் வைத்துள்ளதாகக் கூறி, கடைகளைச் சூறையாடினர்.
இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு நகராட்சி ஆணையர் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், சாலையோரக் கடைகள் விதிமுறைகள் மீறி வைத்திருந்தாலும் அதற்குச் சட்டப்படி நடவேண்டும். இதற்கு மாறாக மனிதநேயமற்று நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டின் அடிப்படையில் கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.