Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றார் “பேட்மேன்”

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றார் “பேட்மேன்”
, புதன், 5 ஜூன் 2019 (12:29 IST)
தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பின் பாட நூல் விலங்கியல் பாடத்தில்,மலிவு விலையில் நாப்கின் பேட்களை தயாரித்த ‘அருணாச்சலம் முருகானந்தம்’ பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
 

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் முருகானந்தம்.பெண்கள் மாதவிடாய் காலங்களில் பொருளாதார சிக்கல் காரணமாக தூய்மையற்ற துணிகளை உபயோகிக்கின்ற அவல நிலையை கண்டு மனம் உடைந்தார் அருணாச்சலம்.

இந்த அவல நிலையை போக்கும் விதமாக வணிகத்தில் தயாரிக்கப்படும் நேப்கினை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபித்தார்.அதற்கு காப்புரிமையும் பெற்றார். மேலும் அவர் ஜெய்ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தையும் நிறுவினார்.தரமான நேப்கின்களை வணிக நோக்கோடு அல்லாமல் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறார்.

இந்த சேவைமனப்பான்மையை பாராட்டி அவருக்கு இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.டைம்ஸ் வார இதழில் உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இணைந்தார்.

இவரின் வாழ்க்கை வரலாறு ”மென்சுரல் மேன்” (2013) என்ற ஆவண படமாகவும் மராத்தியில் “ஃபில்லு” (2017)  என்ற திரைப்படமாகவும் இந்தியில் “பேட்மேன்” (2019) என்ற திரைப்படமாகவும் “பீரியட் எண்டு ஆஃப் செண்டென்ஸ்” (2018) என்ற ஆவண படமாகவும் வெளிவந்துள்ளது.

இதில் “பேட் மேன்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியையும் மக்களிடத்தில் வரவேற்ப்பையும் பெற்றது.இவர் நடித்த ஆவண படமான ““பீரியட் எண்டு ஆஃப் செண்டென்ஸ்” 2018 ஆம் ஆண்டிற்க்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?