Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாமை இழிவுப்படுத்துகிறது இந்த வீடியோ கேம்” தடை செய்ய கூறி புகார்!

Advertiesment
இஸ்லாமை இழிவுப்படுத்துகிறது இந்த வீடியோ கேம்”  தடை செய்ய கூறி புகார்!
, புதன், 5 ஜூன் 2019 (10:59 IST)
பப்ஜி வீடியோ கேம் இஸ்லாம் மதத்தின் புனிதத்தை இழிவுபடுத்துவதாக கூறி தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
 
பப்ஜி என்ற வீடியோ கேம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது.முக்கியமாக இளைஞர்கள் அந்த கேமிலேயே நாள் முழுக்க கழிக்கின்றனர். இந்த அடிமைத்தனத்தின் விளைவாக உடல் கோளாறு மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிக்கபடுகின்றனர்.
 
இப்படிபட்ட பப்ஜி கேம், ”இஸ்லாம் மத புனிதத்தை இழிவுபடுதுகிறது”என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல் துறை ஆணையரிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு புகார் அளித்துள்ளது.
 
அந்த புகாரில் இந்தியா பல இளைஞர்களை கொண்ட நாடு என்றும் அவர்கள் இந்தியாவின் எதிர்கால சக்திகள் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம், இந்தியா வல்லரசு ஆவதை தடுப்பதற்காக வெளிநாட்டு சக்திகள் சதி செய்கிறது என்றும் கூறியுள்ளது.
 
இதனை தொடர்ந்து அந்த புகாரில் முக்கியமாக “இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காஃபாவை இழிவுப்படுதுவதாகவும் அதை போன்றே ஒரு இடத்தை அந்த கேமில் வடிவமைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிக்கு கருப்பு கலருல முண்டாசு... இது ஓகே வா மிஸ்டர் எச்.ராஜா சார்!!