திருச்சிக்கு தனி விமானத்தில் கிளம்பினார் விஜய்.. உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தொண்டர்கள்..!

Mahendran
சனி, 13 செப்டம்பர் 2025 (09:33 IST)
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்குகிறார். அவரது வருகைக்காக, திருச்சி விமான நிலையம் முழுவதும் த.வெ.க. தொண்டர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது. 
 
இன்று காலை  நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து  தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். விஜய் திருச்சிக்கு வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே, த.வெ.க. தொண்டர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு படையெடுக்க தொடங்கினர். உற்சாக வரவேற்பு அளிக்க தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
 
விஜய்யின் முதல் பிரச்சாரப் பயணம், திருச்சியில் உள்ள மரக்கடை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்தப் பயணம், ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஜய்யின் இந்த பிரசாரப் பயணம், தமிழகத்தின் அரசியல் சூழலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது பேச்சுகளும், மக்களிடம் அவருக்கு கிடைக்கும் ஆதரவும், வரவிருக்கும் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்: வதந்தி வீடியோவை பரப்பிய 25 பேர் மீது வழக்கு.. விரைவில் கைது! - சென்னை காவல்துறை அதிரடி!

தலித் பெண்களை மதம் மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு.. 43 வயது நபர் கைது..!

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல்! இதை நீங்களும் ஆதரிக்கிறீங்களா? - அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்!

கரூர் துயர சம்பவம்.. விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனை..!

ஆயுதபூஜை விடுமுறை.. தென்மாவட்டங்களுக்கு செல்வோர் எப்படி செல்ல வேண்டும்.. முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments