உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (17:28 IST)
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். "மக்களுடன் சந்திப்பு" என்ற பெயரில் அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் முதல் கட்டம், திருச்சியில் இருந்து ஆரம்பமாகிறது.
 
நாளை காலை 10.30 மணிக்கு, திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து இந்தப் பயணம் தொடங்க உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் விஜய், விமான நிலையத்திலிருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிரசார வாகனத்தில் பயணிக்க உள்ளார்.
 
அந்த வாகனம், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சென்றடையும். அங்கு திறந்த வாகனத்தில் நின்று கொண்டு, சுமார் அரை மணி நேரம் அவர் மக்களுடன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தப் பயணத்திற்காக, "உங்கள் விஜய் நான் வரேன்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிரசார வாகனம், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் இருந்து திருச்சிக்கு ஏற்கனவே புறப்பட்டு சென்றுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments