Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவெக மாநாட்டில் 8 உயிரிழப்புகள்.. வேதனையுடன் அறிக்கை வெளியிட்ட விஜய்..!

Vijay

Siva

, செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:06 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலையில் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்கள், கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள், விபத்து உள்பட பல்வேறு வகையில் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து வேதனையுடன் விஜய் வெளியிட்ட அறிக்கைகள் கூறியிருப்பதாவது

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு.  கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவை அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை