உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

Bala
ஞாயிறு, 16 நவம்பர் 2025 (18:10 IST)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெகா சார்பில் இன்று தமிழகமெங்கும் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது.
 
இந்நிலையில்தான் தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார் இந்நிலையில்தான் என்று தமிழகத்தில் பல இடங்களிலும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
சென்னையில் சிவானந்தா சாலையில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா தவெகவினரை போலீஸார் மோசமாக நடத்துகிறார்கள். தவெக நிர்வாகிகளை படாதபாடு படுத்திவிட்டனர். 10 நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு 10 கிலோ மீட்டர் சுத்த விட்டிருக்கிறார்கள். பல கிலோமீட்டர் நடந்தது நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி உங்களுக்கு எங்கள் மீது என்ன பயம்? என பேசினார் அவருக்கு அடுத்து பேசிய பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் ‘போலீசை பார்த்து நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
 
தவெக கொடியை பார்த்தாலே இந்த பக்கம் திரும்புங்கள்.. அந்த பக்கம் திரும்புங்கள் என்று சொல்லி போலீசார் அலைக்கழிக்கிறார்கள். இன்னும் 5 மாதத்தில் எல்லாம் மாறிவிடும். இவர்கள் பேச்சைக் கேட்கத் தேவையில்லை’ என கோபமாக பேசி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments