Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்… அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:48 IST)
அதிமுகவினரின் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இருப்பது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிகலாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் சசிகலா அதிமுகவினர் உரையாடல் நடந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலா மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments