தேர்தலுக்கு சசிகலா போட்டு கொடுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் போனதால் தினகரனின் அமமுக கட்சி கடும் சரிவை சந்தித்தது என செய்திகள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு டிடிவி தினகரனின் அமமுக கட்சி அரசியலில் கடும் சரிவை சந்தித்தது. தினகரன் சசிகலாவின் ஆலோசனைப்படியே தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் சசிகலாவின் தேர்தல் திட்டமே வேறு என்பது தெரியவந்துள்ளது.
ஆம், சசிகலா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவித்தாராம். ஆனா, தினகரன் இதை ஏற்காமல் இரண்டு தேர்தலிலும் போட்டியிட்டு மண்ணை கவ்வினார்.
அதோடு, அப்போதே சசிகலா அமமுக தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு சாதகமாக வாக்குகள் விழும் திமுக நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்றும் தினகரனை எச்சரித்தாராம். ஆனால், இதை எதையுமே தினகரன் கேட்காததால், தேர்தல் வியூகங்கள் அமமுகவிற்கு தோல்வியே கொடுத்துள்ளது.
இனியேனும் தினகரன் தனது தேர்தல் வியூகங்களை மாற்றி அரசியலில் வெற்றி பெருவாரா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.