Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா கொள்ளையடிச்ச பணத்துல... ஸ்டாலின் சிஎம்; அமைச்சர் பரபர பேட்டி! (வீடியோ இணைப்பு)

Advertiesment
அம்மா கொள்ளையடிச்ச பணத்துல... ஸ்டாலின் சிஎம்; அமைச்சர் பரபர பேட்டி! (வீடியோ இணைப்பு)
, புதன், 19 ஜூன் 2019 (12:54 IST)
அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 
 
திண்டுக்கல் சீனிவாசன் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக உள்ளார். 
 
பேட்டிகளிலும், மேடை பிரச்சாரங்களிலும் உலறி கொட்டும் இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட விழா ஒன்று டிடிவி தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்வதாக நினைத்து ஜெயலலிதாவை அவமானப்படுத்தியுள்ளார். 
 
அவர் பேசியதில், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு 18 பேரும் திமுகவில் இணைந்தால், அடுத்து ஸ்டாலின் முதல்வராகவும், டிடிவி தினகரன் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என திட்டம் போட்டுள்ளனர் என கூறியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு? குமாரசாமி பரபரப்பு பேட்டி