நேற்று முடிவடைந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரனின் அமமுக கட்சிக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கியது போல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னமே வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொதுச்செயலாளர் பதவியை தான் ஏற்று கொண்டதால் சசிகலாவுக்கு இனி கட்சியில் என்ன பதவி என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், 'சசிகலாவுக்காக அமமுக-வில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது