Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வருக்கு தக்க பாடம் புகட்டுவோம்; தினகரன் அதிரடி

முதல்வருக்கு தக்க பாடம் புகட்டுவோம்; தினகரன் அதிரடி

Arun Prasath

, வெள்ளி, 6 மார்ச் 2020 (19:38 IST)
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்டுவோம் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவர் மறைந்த நிலையில், இத் தேர்தல் தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகும் தேர்தலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”தமிழக அமைச்சர்கள் சொந்த பிரச்சனையை மத்திய அரசிடம் பேசுகிறார்கள். ஜெயலலிதா ஆட்சி அமையும் வகையில் எங்களது தேர்தல் கூட்டணி இருக்கும்” என கூறியுள்ளார்.
webdunia

மேலும் அவர், “ஆட்சியில் இருந்தால் தான் ஆளுமை என முதல்வர் நினைக்கிறார். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்டுவோம்: என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை நோக்கி வரும் விண்கல்.. மக்கள் பீதி