Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னிப்பு கேக்க வேண்டியது ஓபிஎஸ்தான்.. நாங்க இல்ல..! – குட்டி ஸ்டோரிக்கு டிடிவி தினகரன் பதிலடி!

Advertiesment
மன்னிப்பு கேக்க வேண்டியது ஓபிஎஸ்தான்.. நாங்க இல்ல..! – குட்டி ஸ்டோரிக்கு டிடிவி தினகரன் பதிலடி!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:12 IST)
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் சொன்ன குட்டிக்கதைக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது விடுதலையாகி வந்த சசிகலா தான் மீண்டும் அதிமுகவை மீட்பேன் என பேசி வருகிறார்.

இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவினருக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசியுள்ளார். 

இதுகுறித்து பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “தவறு செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே செய்த தவறுகளால்தான் போலீஸை கண்டு ஓடி ஒளிகின்றனர்” என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுக்கட்டாக பணம்; துணை ராணுவம் வருகை! – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!