உத்தர பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடந்த ரெய்டில் பல கோடி ரூபாய் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அவ்வபோது பல்வேறு மாநிலங்களில் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வது வாடிக்கையாக உள்ளது. பொதுவாக இதுபோன்ற ரெய்டுகளில் பணம் ஓரளவு அகப்பட்டாலும், அசையா சொத்துகளாக முறைகேடாக வாங்கியதன் ஆவணங்கள் போன்றவையும் அகப்படும்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சோதனை செய்யப்பட்டபோது அவர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எண்ணப்பட்ட பணம் மட்டும் ரூ.150 கோடி உள்ள நிலையில் எண்ணாமல் மேலும் பல பணக்கட்டுகள் உள்ளதாம். இதனால் பாதுகாப்புக்காக வருமானவரித்துறையினர் துணை ராணுவத்தையே வரவழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.