Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக-வில்தான் உதயா அணி, துர்கா அணி, மாப்பிள்ளை அணி உள்ளது! உதயநிதிக்கு டிடிவி தினகரன் பதிலடி

Advertiesment
ttv dinakaran

Siva

, வியாழன், 28 மார்ச் 2024 (13:47 IST)
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதாகவும் குறிப்பாக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, ஜெ தீபா அணி, ஜெ தீபாவின் டிரைவர் அணி என கிண்டல் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள டிடிவி தினகரன் திமுகவில் தான் உதயா அணி, இதயா அணி, துர்கா அணி, மாப்பிள்ளை அணி, இருப்பதாக கூறினார் 
 
மேலும் விவசாய கடன் நகை கடன் தள்ளுபடி என இஞ்சிமரப்பா குரலில் பேசி ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என்றும் சொத்து வரியை 150 சதவீதம் ஏத்திவிட்டு மகளிர்க்கு இலவச பேருந்து என்று கூறி ஓட்டை பேருந்துகளை விட்டு உள்ளனர் என்றும் கூறினார் 
 
தேனி தொகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக இருக்கிறது என்று என்னை வெற்றி பெறச் செய்தால்   தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை உருவாக்கிய திமுகவுக்கு உரிய தண்டனை பெற்று தருவேன்’ என்று கூறினார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வாதங்களை முன்வைக்க கோரி மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு.!!