Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி

Advertiesment
கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (05:56 IST)
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியில் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இவரது இறப்புக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கருணாநிதியின் உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் மற்றும் சிஐடி காலனி உள்ள இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
 
அதன்பிறகு தற்போது கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 
அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது கருணாநிதி உடல்