Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்துவதா? டிடிவி தினகரன் கண்டனம்

Advertiesment
டிடிவி தினகரன்
, செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:36 IST)
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்துவதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும்.
 
எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு மாதம் ரூ.1000! பணம் வரலைன்னா என்ன செய்யணும்?