Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. மரணம் இயற்கையானது – டிடிவி திட்டவட்டம்!

Advertiesment
டிடிவி தினகரன்
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:03 IST)
ஜெ. மரணம் இயற்கையானது தன் என்பது அனைவருக்கும் தெரியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


ஆறுமுகசாமி ஆணையத்தை வைத்து அரசியல் மட்டும்தான் செய்யலாம் என்றும் வேறு எதற்கும் இந்த அறிக்கை பயன்படாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் சசிகலா உட்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் சசிகலாவை நேரில் விசாரணை செய்யவில்லை என்பது முரண்பாடாக உள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் இது குறித்து பேசியதாவது, ஜெ. மரணம் இயற்கையானது தன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கை போல உள்ளது. உண்மை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பார்ப்போம்.

இந்த அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாக செல்வார். மருத்துவர்கள் அந்த நேரத்தில் எது சரியோ அதை செய்தனர். இந்த அறிக்கையை சிபிஐ விசாரித்தால் ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.

 
 Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 2,119 பேர் பாதிப்பு; 10 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!