Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த மாதிரியான சட்டங்களை அனுமதிக்கவே கூடாது! – டிடிவி தினகரன் கண்டன அறிக்கை

Advertiesment
இந்த மாதிரியான சட்டங்களை அனுமதிக்கவே கூடாது! – டிடிவி தினகரன் கண்டன அறிக்கை
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (13:37 IST)
மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கோரி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு – 2020க்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்த சட்டத்தால் இயற்கை வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என பலர் கூறிவரும் நிலையில் இதன்மூலம் மக்களின் குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “புதிய வரைவுப்படி புதிதாக தொழில் தொடங்கவரும் நிறுவனங்கள் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு பெறாமலேயே தொழில் தொடங்கிவிட்டு பிறகு அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அனுமதியின்றி கட்டிட பணிகளை செய்வதற்கான வரம்பு 50 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 1,50,000 ஆயிரம் சதுர அடி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது. ராணுவ திட்டங்களுக்கான ஸ்ட்ரேட்டஜிக் முறைகளை தனியாருக்கு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள டிடிவி தினகரன் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காளைகளை வாடகைக்கு எடுக்க பணமில்லை: மகள்களை வைத்து உழுத விவசாயி