Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக அரசை சாடிய டிடிவி தினகரன்: எதற்கு தெரியுமா?

Advertiesment
அதிமுக அரசை சாடிய டிடிவி தினகரன்: எதற்கு தெரியுமா?
, புதன், 13 ஜனவரி 2021 (10:58 IST)
தூய்மைப் பணியாளர்கள் 700 பேரை மாநகராட்சி வேலையை விட்டு நீக்கியது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு. 

 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற  தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
 
அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டா சரக்கை தொடவே கூடாது! மீறி தொட்டால்? – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!