டிடிவி தினகரன் பொட்டத்தனமாக செயல்படுகிறார் என்றும், பேடித்தனமாக செயல்படுகிறார் என்றும், இப்படியே போனால் தான் விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்கதமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்தே கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரின் பிரச்சனைகள் சந்திக்கு வந்துள்ளது. தங்கதமிழ்ச்செல்வனின் ஆடியோ வெளியாகிய நிலையில் பதில் அதிரடியாக டிடிவி தினகரன் இன்று காலை சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு தேனி மாவட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை செய்யவிருப்பதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை டிடிவி தினகரன் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே அமமுகவில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்டனர். மக்களிடையே பிரபலமாக இருந்தவர்களில் தங்கதமிழ்ச்செல்வன் ஒருவர் மட்டுமே அமமுகவில் இருந்து வருகிறார். தற்போது அவரையும் நீக்கிவிட்டால் அமமுக கட்சி செல்லாக்காசாகிவிடும் என்று அக்கட்சியின் தொண்டர்களே வருத்தமுடன் கூறி வருகின்றனர். டிடிவி தினகரன் தொடர்ந்து கட்சி நடத்துவது கேள்விக்குறியே என்றும், அவர் மீண்டும் வெளிநாடு சென்று தனது பிசினஸை பார்க்க விரைவில் கிளம்பிவிடுவார் என்றும் வதந்திகள் கூறுகின்றன