எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்: புகழேந்தி குறித்து டிடிவி தினகரன்

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (12:06 IST)
அமமுகவை சேர்ந்த புகழேந்தியின் வீடியோ குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அமமுக கட்சியைச் சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில் ”பல வருடங்களாக யாரென்றே தெரியாத டிடிவி தினகரனை, நான் தான் அடையாளப்படுத்தினேன்” என புகழேந்தி கூறியதாக இடம்பெற்றிருந்தது. இதனை குறித்து அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல், புகழேந்தி வேறு கட்சிக்கு தாவப்போவதாக தெரிகிறது என கூறினார்.

இதன் பின்பு சமீபத்தில் இது குறித்து பேசிய புகழேந்தி, வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை, அதனை தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். இந்நிலையில் தற்போது டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இதனை குறித்து கேட்டபோது, “நான் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். புகழேந்தி திட்டமிட்டு பேசி வீடியோ எடுத்து வெளியிடவில்லை. புகழேந்தி விவகாரம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அமமுகவிலிருந்து புகழேந்தி நீக்கப்படுவாரா? டிடிவி தினகரன் எடுக்கப்போகும் நடவடிக்கையை பொருத்திருந்து தான் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!