15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி? டீப் திங்கிங்கில் தமிழிசை!

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (11:57 IST)
15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளாராம்.
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் கவர்னராக கடந்த ஞாயிற்றுகிழமை பதவியேற்றுக்கொண்டார். 
 
அதன்பின்னர் வழக்கம் போல் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். ஊழியர்களிடம் கடமையை சரியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டவர் அவர், யோகாவும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
இதன் பின்னர் இன்னும் 15 நாட்களில் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு தெலங்கானா மாநில மக்களுடனும், ஊழியர்களுடனும் சரளமாக பேசிவேன் எனவும் கூறியுள்ளாராம். 
 
இந்த தகவலை தெலங்கானாவின் ஐ.ஆர்.டி துறை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கையோடு, தமிழிசையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சசிகலா வரட்டும்; கட்சி தாவும் ப்ளான் இப்போ இல்ல... புகழேந்தி!!