Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 'அம்மா உணவகம் 'மூடுவதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

Advertiesment
ttv dinakaran
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:16 IST)
சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், சென்னை மா நகராட்சி கணக்கு  னிலைக்குழு தலைவர் தனசேகர் தினமும் ரூ.500 க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட  வேண்டும் என கூறினார்.

இதற்கு அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரன் தன் டிஉவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.

அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவனை தீவிரவாதியோடு ஒப்பிட்ட பேராசிரியர் சஸ்பெண்ட்