Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா? சென்னை மேயர் தகவல்!

Advertiesment
mayor
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
 
 சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் ப்ரியா, ‘அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் திமுக ஆட்சியில் சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
ஆனால் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இருப்பினும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து எப்படி செயல்பாட்டில் உள்ளதோ அதேபோல் இனியும் தொடரும் என்றும் பயன்பாட்டில் இல்லாத ஒருசில அம்மா உணவகங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் 
 
சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவலை அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தரத்தில் நின்ற லிப்ட்; சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!