Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா டயலாக் மாதிரி பேசிட்டார்... தினகரன் கேஷுவல் அப்ரோச்!

Advertiesment
சினிமா டயலாக் மாதிரி பேசிட்டார்... தினகரன் கேஷுவல் அப்ரோச்!
, புதன், 15 மே 2019 (13:54 IST)
சினிமாவில் வசனம் பேசுவதை போல் கமல் பேசிவிட்டார் என அமமுக தலைவர் கமல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியது அரசியல்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கமலுக்கு எச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, பிரேமலதா, நடிகை கஸ்தூரி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ ஆகியோர் கமலை ஆதரித்துள்ளனர். 
webdunia
இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது தவறு. திரைப்படத்தில் வசனம் பேசுவதைப் போல கமல் பேசிவிட்டார். 
 
எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது என்று அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட போது தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு !