Publish Date: Tue, 03 Oct 2023 (12:16 IST)
Updated Date: Tue, 03 Oct 2023 (12:20 IST)
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திரும்பப் பெறப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், 3வது முறையாக ஜாமின் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திடீரென வாபஸ் பெறப்பட்டது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஜாமின் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் வாசன் தரப்பினர் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.