Publish Date: Mon, 02 Jan 2023 (16:54 IST)
Updated Date: Mon, 02 Jan 2023 (17:02 IST)
டிடிஎஃப் வாசன் இன்று சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றதால் அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து இவர் மீது சூலூர்,கடலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎஃப் வாசன் இன்று சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றதால் அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த டிடிஎஃப் வாசனின் காரில் நம்பர் பிளேட் இல்லாததால் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீஸார்.
மேலும், உரிய ஆவணங்கள் சமர்பித்து, காரை எடுத்துச் செல்லும்படி அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.