நான் அப்பாவி.. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு தாக்கல்..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:47 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அவருடைய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 இந்த நிலையில் TTF வாசன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவில் தான் அப்பாவி, எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments