அதிமுகவுக்கு ஆதரவு அளித்த இந்தியா கூட்டணியின் கட்சி.. பெரும் பரபரப்பு

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (06:50 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியின் பிரமுகர் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது கட்சியின் ஆதரவை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த நிதீஷ் குமார் சமீபத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உட்பட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி சிதறி அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கலைவாணன் என்பவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தகவல் கட்சியின் ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தங்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வ கடிதத்தையும் தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி திமுகவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுகவுக்கு ஆதரவளித்தது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments