Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

J.Durai

, புதன், 21 பிப்ரவரி 2024 (09:25 IST)
நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அறிவிப்புகள் விவசாயிகளின் குறை தீர்க்கும் வகையில் இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


 
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியது:

வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் ஒன்றாக சேர்த்து ஊரகத்  துறை வனத்துறை மீன்வளத்துறை, பால் வளத்துறை. அனைத்தையும் ஒன்றாக நினைத்து வேளாண் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் ஒரு குவின்டால் நெல்லுக்கு வழங்கப்படும், ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ஆதார விலை 4000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

விவசாயிகளை ஆட்சிக்கு வந்த பின் மறந்து விடுகிறார்கள் என்று விவசாயிகளை புரிந்து கொண்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 3.50 லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் இல்லாமல் சேதம் அடைந்து உள்ளது, பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.

இதனை அரசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்தும் அது செய்யவில்லை.

இந்த பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் குருவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை, இனி வரும் காலத்தில் அவர்களை சேர்க்க வேண்டும் , அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்.

சம்பா தாளடி விவசாயிகள் கர்நாடகத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறாததால் பயிர் விளைச்சல் பாதிக்கிறது.

உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும். காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை.

 
சம்பா, தாளடி பயிரிட்டு வீணான ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் .

பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைத்திருந்தால் 84,000 கிடைத்து இருக்கும்.

அதிமுக ஆட்சியில் கரும்பு விவசாயிகள் கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யபட்டது.

இந்த காலகட்டத்தில் துவக்கப்பட்டு இருந்தால் இதுவரை 2 லட்சம் டன் அறுவை செய்து இருக்கலாம்.

வேளாண் துறை அமைச்சரின் தொகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை முறையாக இயக்காததால் பாதிப்பு.

ஓசூரில் சர்வதேச ஏலம் செய்யும் மையம் அதிமுக ஆட்சியில் அமைக்கபட்டது, அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

இயற்கை விவசாயத்திற்கு இன்றைய வேளாண் பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

தென்னை விவசாயிகளுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் இளநீர், தேங்காய் பயன்பாடுகள் செய்ய ஊக்கத்தொகை,

நோய்களால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைந்த தென்னை உற்பத்தி வளாகம் ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னார்கள் அதுவும் செய்யவில்லை.

கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்யும் அதன் விலையை அரசு நிர்ணயம் செய்யும் என்று சொன்னார்கள், தேங்காய் எண்ணையை ரேஷன் கடையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை.

ஆன்லைன் முறை கொண்டு வந்ததன் காரணமாக படிக்காத விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் அதனை அறிவுறுத்தினோம் அதற்கு அறிவிப்புகள் இல்லை. காவிரி குண்டாறு இணைக்கும் திட்டம் அதிமுக அரசு அடிக்கல் நாட்டியது அது கிடப்பில் கிடக்கிறது.

மேகதாது அணை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சேலம் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி நீர் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது அதற்கும் நிதி ஒதுக்கவில்லை.

கோதாவரி காவிரி இணைப்புக்கும் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. நாம் நீருக்கு அண்டை மாநிலத்தை நம்பி தான் உள்ளோம். கோதாவரி காவிரி இணைப்பு செய்தால் குடிநீருக்கு விவசாயத்திற்கும் பிரச்சனை இருக்காது. நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை இந்த அரசு செயல்படாத அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.

நிதிநிலை அறிக்கையில் கிராமத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

கிராமத்தை வளர்ச்சி அடைய செய்தால் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயிகளுக்கு பயனில்லை,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் இந்த வயதிலேயே அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை! -ஃபார்வேர்ட் பிளாக் கட்சி கதிரவன் பேட்டி!