Publish Date: Tue, 16 Mar 2021 (10:47 IST)
Updated Date: Tue, 16 Mar 2021 (10:49 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திருச்சி அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த முறை மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் 9 பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் அவர்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விடுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.