Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சி நகைக்கடை கொள்ளை : சுரேஷை வளைத்து பிடித்த போலீஸார்..

திருச்சி நகைக்கடை கொள்ளை : சுரேஷை வளைத்து பிடித்த போலீஸார்..
, சனி, 5 அக்டோபர் 2019 (16:18 IST)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலையில்  இரு கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ள நிலையில், இக்கொள்ளையில் தொடர்புடைய சுரேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். 
நேற்று முன்தினம் இது தொடர்பாக 6 வடமாநிலத்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த நிலையில், தற்போது உண்மையான குற்றவாளி சிக்கியுள்ளான். ஆம், திருவாரூரில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு  நபரிடம் சோதனை செய்தனர். 
 
அப்போது அந்த நபரிடம் 5 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. அந்த நகைகளின் பார்கோடை சோதனை செய்ததில் அது லலிதா ஜுவல்லரியில் திருட போன நகைகளின் பார்கோடுடன் ஒத்துபோனது. இதனால், அந்த நபரை கைது செய்தனர். அவன் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்துள்ளது.  
 
இவனுடன் திருடிய இன்னொருவன் சீராத்தோப்பு சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர். மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த 5 கிலோ தன்னுடைய பங்கு அதை பெற்றுக்கொண்டு வந்த போது சிக்கிவிட்டேன் என தெரிவித்துள்ளான். மணிகண்டனிடம் இருது 5 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், இந்த திருட்டுக் கும்பலுக்கு தலைவனாகச் செயல்பட்டவன் முருகன். இவன், பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வருபவன். இவன் ஏற்கனவே தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டியுள்ளான். 
 
 
கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இந்த முருகனை போலீஸார் ஒரு முரை கைது செய்து சிரையில் அடைத்தார்களாம். அதன் பின்னர் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் இது போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து வந்துள்ளான். 
 
20 வருடங்களாக இந்த திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் முருகன், போலீஸில் சிக்காமல் இருக்க காரில் சுற்றிய வண்ணமே இருப்பானாம். வழக்கு குறித்த கவனம் குறைந்ததும் திருடிய நகைகளை நாகப்பட்டிணத்தில் உள்ள ஒருவரிடம் விற்றுவிட்டுவான் என  என பரபரப்பான தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில், இந்த திருட்டு சம்பந்தமாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை அமைத்து திருடர்களை தீவிரமாக தேடி வருவதாகத் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள்  பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகளை போலீஸார், இன்று வெளியிட்டுள்ளனர்.  அந்த பைக் எண் ஆகியவற்றின் அடிப்படையில் தப்பி ஓடிய திருடர்களை தேடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சுரேஷை கைது செய்தனர். 
 
திருச்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனவே, கைதான சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா பட பாணியில் ...தலையில் விக்... அதுக்கு கீழே தங்கம் ! மாட்டிக்கொண்ட இளைஞர்