Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி: காரணம் இதுவா இருக்குமோ?

சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி: காரணம் இதுவா இருக்குமோ?

Advertiesment
சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி: காரணம் இதுவா இருக்குமோ?
, திங்கள், 9 அக்டோபர் 2017 (17:22 IST)
சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பணியமர்த்தப்பட்டுள்ளார். திருநங்கைகள் அந்த பகுதியில் அதிகமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொதுவாக பேச்சு உண்டு. அதனை கட்டுப்படுத்த திருநங்கை ஒருவரை உதவி ஆய்வாளராக நியமித்திருக்கிறார்களோ என தோன்றுகிறது.


 
 
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி கடந்த ஆண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார். வண்டலூரில் பயற்சி முடித்த அவர் தர்மபுரி காவல் நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு அதனையும் நிறைவு செய்தனர்.
 
இந்நிலையில் அந்த சிறப்பு வகுப்பில் கலந்துகொண்டு நிறைவு செய்த 244 பேருக்கும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதில் திருநங்கை பிரித்திகா யாஷினி சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
 
பொதுவாக சூளைமேடு பகுதியில் அதிகமாக திருநங்கைகள் காணப்படுவார்கள். அவர்கள் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இரவு நேரங்களில் மிகவும் பப்ளிக்காக சாலை ஓரங்களில் நின்று அவர்கள் பாலியல் தொழில் செய்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இது காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.
 
இந்நிலையில் திருநங்கை ஒருவரை அந்த பகுதி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக நியமித்திருப்பதின் பின்னணியில் இந்த பாலியல் தொழிலை ஒழிக்கும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என நினைக்க தோன்றுகிறது. மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருநங்கைகள் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
திருநங்கைகளை இதுபோன்ற செயல்களில் இருந்து மீட்டு அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர, சமூகத்தில் அவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்க உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி முயற்சி செய்வார் என நம்புவோம். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வீடியோவால் தரம் தாழ்ந்து போன டவ்: வீடியோ உள்ளே...