Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரை தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர்...?

முதல்வரை தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர்...?
, வியாழன், 1 நவம்பர் 2018 (15:00 IST)
பிரபல நடிகராகவும் .இயக்குநராகவும்  எண்பது - தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்தவர் டி.ராஜேந்தர் . அவர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.

ஆனால் என்ன காரணத்தினாலோ திடீரென்று அதற்கு  எந்த எந்த முக்கியத்துவமும் தராமல் இருந்தார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடன் அரசியல் பிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர், ஏனோ விஜயகாந்த்  மற்றும் சரத்குமார் போல தன்னை தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.எதுகை மோனையாக தமிழ் மொழியில் சரளமாக பேசுவது கைவரப்பெற்றவருக்கு அரசியல் சற்று காலை வாரிவிட்டதெனலாம்.
 
இன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றிய தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.
 
அவர் கூறியதாவது:
 
இன்று தமிழக முதல்வராக இருக்கும் இ.பி.எஸ்.சின்னம்மா முதல்வராக முடியவில்லை என்பதால்தான் அந்த பதவிக்கு வந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் என்ன தியாகம் செய்தார். எதோ அதிர்ஷ்டத்தால் அந்த பதிவியில் இருக்கிறார். இவர்கள் தரும் ஆட்சி எப்படி இருக்கும்...?  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
இது குறித்து முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ இன்னும் டி.ராஜேஜ்திரனின் விமர்சனத்திற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்