பாமக நிறுவனர் ராமதாஸ் தான் ஏன் பாமகவை ஆரம்பித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் முக்கிய கட்சியாக திகழ்ந்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சிக்கு தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. அதே நேரத்தில் சாதிக்கட்சி என்ற முத்திரையும் உள்ளது. இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு இப்போது 31 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளன.
இந்நிலையில் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசியுள்ள ராமதாஸ் 20 சதவீத இட ஒதுக்கீடுக்காக 21 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இருபது சதவிகித இடம் ஒதுக்கீடு மட்டும் கிடைத்திருந்தால் வன்னியர்களில் பலரும் அரசு அதிகாரிகளாக வந்திருப்பார்கள். நான் நல்ல பழத்தைக் கேட்டும் கருணாநிதி அழுகிய கனியை கொடுத்தார். 10 வருடங்களாக போராடி பார்த்தும் கருணாநிதி ஏமாற்றியதால்தான் நான் பாமகவை ஆரம்பித்தேன் எனக் கூறியுள்ளார்.