Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

Advertiesment
மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

Siva

, வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:58 IST)
மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது ஏற்பட்ட விபத்தில், பொக்லைன் டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி  ஆம்னி பேருந்து நிலையம் அருகே, நக்கீரர் அலங்கார நினைவு வளையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வளைவு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து, இந்த வளைவை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இரவு இந்த வளைவை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நுழைவு வளைவு இடித்து கொண்டிருந்த போது, திடீரென அதன் ஒரு பகுதி பொக்லைன் இயந்திரத்தின் மீது விழுந்ததால், பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, அருகில் நின்று இருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!