Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இ – பாஸ் கட்டாயம் - முதல்வர் பழனிசாமி

Advertiesment
ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கு  இனிமேல் இ – பாஸ் கட்டாயம் - முதல்வர் பழனிசாமி
, புதன், 24 ஜூன் 2020 (17:22 IST)
தமிழகத்தில் கொரொனா வேகமாகப்பரவி வருகிறது., இதைத்தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி தளர்வுகளுடன் பொது ஊடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  போன்ற மாவட்டக்களை அடுத்து, மதுரையிலும் பொது ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருந்த நிலையில், இறப்பும், விமானம், ரயில் போன்ற முக்கிய சேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும், வாகனங்களில் செல்லகூடாது என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படும் எனவும் ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இ – பாஸ் கட்டாயம்  எனவும் கார் ,பைக், தனியார் போக்குவரத்துகளுக்கு அனுமதி கிடையாது எனவும்  முதல்வர் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 வணிகர்கள் உயிரிழப்பு… முதல்வர் பழனிசாமி இரங்கல்! ரூ.20 லட்சம் நிதி உதவி