Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுவுக்கு அடிமையான குரங்கு... சிறையில் அடைப்பு !

Advertiesment
மதுவுக்கு அடிமையான குரங்கு... சிறையில் அடைப்பு !
, செவ்வாய், 16 ஜூன் 2020 (22:51 IST)
மதுவுக்கு அடிமையான குரங்கு ஒன்றை சிறைப்படுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம்  மிர்சாபூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார்.  அந்த குரங்கை அவர் கலுவா என்று பெயரிட்டு அழைத்து வந்தார்.

தினமும் மதுகுடிக்கும் பழக்கம் கொண்ட அவர் தான் குடிக்கும்போது, அதற்கும் சிறிது கொடுத்து வந்துள்ளார். அதனால் குரங்கு மதுவுக்கு அடிமையானது.

மது இல்லாமல் குரங்கால் அமைதியாக இருக்க முடியாது என்ற நிலையில் குரங்கின் உரிமையாளர் இறந்துவிட்டார். அதனால் மதுகுடிக்காமல் இருந்த குரங்கு வருவோர் போவோரை கடிக்கத் தொடங்கியது.

இதில், 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இது குறித்து அறிந்த வனத்துறையினர் மிர்சாபூர் மாவட்டத்திற்கு வந்து மது இல்லாமல் வெறிபிடித்த  குரங்கைப் பிடித்துச் சென்றனர். தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது குரங்கு.இதனால் மக்கள் நிம்மதியுடன் அந்த ஊரில் நடமாட முடிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்? இந்திய - சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் !!