Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதி ஒரு இளைஞர், அவருக்கு எதுவும் ஆகாது: டிராபிக் ராமசாமி

Advertiesment
கருணாநிதி ஒரு இளைஞர், அவருக்கு எதுவும் ஆகாது: டிராபிக் ராமசாமி
, சனி, 28 ஜூலை 2018 (10:16 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நல கோளாறு காரணமாக நேற்று நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கருணாநிதி தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் திமுக பிரமுகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
webdunia
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த டிராபிக் ராமசாமி, 'கருணாநிதி என்ற இளைஞருக்கு ஒன்றும் ஆகாது. இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரே அதுவும் எதுவும் ஆகுமே தவிர, அதுவரை அவர் நன்றாக இருப்பார். கருணாநிதி குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். எனவே அவரது உடல்நிலை குறித்து தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியிடம் ஆட்டோகிராப் - பேமஸ் ஆன மாணவியை திருமணம் செய்ய போட்டி