Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்; டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்னாவிரதம் போராட்டம்

Advertiesment
24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்; டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்னாவிரதம் போராட்டம்
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (17:31 IST)
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


 

 
டிராபிக் ராமசாமி சென்னை பிராட்வே சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் காலை 9 மணி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது திடீர் போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். 
 
இன்னும் 24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லையென்றால் தலைமை செயலம் அல்லது ஆளுநர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை நீக்க முடிவு?: ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடுகிறது அதிமுக முக்கிய தலைகள்!