அதிமுகவின் இரு அணிகள் இணைந்தவுடன் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும், அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் பேசி வந்த தினகரன் தரப்பினர் தற்போது திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
‘நாங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம். நீங்கள் ஆதரியுங்கள். பாஜகவை இருவரும் சேர்ந்தே எதிர்ப்போம். பிற்காலத்திலும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படலாம். ஸ்டாலின் தலைமையில் ஆட்சி, தினகரன் துணை முதல்வர் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறதாம் என்று திமுகவுக்கு தினகரன் அணி தூதுவிட்டதாம்.
ஆனால் திமுகவில் இதை கேட்டு சிரிக்கின்றார்கள். தினகரனுடன் கூட்டு சேர்வது தற்கொலைக்கு சமம். சசிகலா குடும்பத்தினர் மீது மக்கள் வெறுப்பில் இருக்கும்போது நாங்கள் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எங்களையும் பொதுமக்கள் எதிர்ப்பார்கள். அந்த நிலையைல் எங்கள் தளபதி கொண்டு வர மாட்டார்'' என்று கூறுகின்றனர். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்