Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலக்கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: டி.ஆர்.பாலு

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (07:37 IST)
மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்ய முடியாது என்றும் ஆட்சி அமைக்கவும் முடியாது என்றும் திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார் 
 
நாடாளுமன்றம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற திமுக தலைவர் டிஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய போது ’அதானி பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வந்தோம், பதில் இல்லை என்று குற்றம் சாட்டினார். 
 
மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ராகுல் காந்திக்கு தண்டனை கிடைத்துள்ளது என்றும் மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் நாங்கள் தீர்ப்புக்கு எதிராக போராடவில்லை பிரதமர் மோடிக்கு தான் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் எதிர்க்கட்சிகள் 100% ஒற்றுமையுடன் இருந்தால்தான் இந்த ஆட்சியை அகற்ற முடியும் என்றும் மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்றும் மாநில கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வழி நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments