Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக எம்.எல்.ஏ விருபாக்சப்பா போலீஸாரால் கைது

Advertiesment
BJP MLA Virupakshappa arrested by police
, திங்கள், 27 மார்ச் 2023 (20:17 IST)
லஞ்சம் பெற்ற வழக்கில் இன்று,   பாஜக எம்.எல்.ஏ விருபாக்சப்பா  போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், தற்போது, 4% உள்இடஒதுக்கீடு விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்த  நடைபெற்ற  போராட்டம் வன்முறையாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று,   பாஜக எம்.எல்.ஏ விருபாக்சப்பா  போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மாதல் விருபாக்சப்பா மீது முன்வைத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ்  முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில்,  ஜாமீன் மறுக்கப்பட்ட  நிலையில்,. சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பாவை இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருபாக்சாவின் மகன் லஞ்சம் பெறும்போது கையும் களவுமான லோக்யாத்தா போலீஸார் கைது செய்த நிலையில், விருப்பாக்சப்பாவின் மகன் வீட்டிலிருந்து ரூ. 8 கோடி பணத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''742 மாணவர்களும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதவில்லை''- பயிற்சி மைய நிர்வாகி