ஆசியாவின் முதல் பணக்காரர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்கார தொழிலதிபர் அதானி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை ஆசியாவின் இரண்டாவது பணக்கார ராக இருந்த சீனாவை சேர்ந்த ஷேன்ஷேன் என்ற தொழிலதிபரை இந்தியாவின் அதானி பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனை அடுத்து ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உயர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ப்ளூம்பெர்க் வெளியிட்ட இந்த பட்டியலில் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இன்னும் அம்பானி தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் உலக அளவிலான பணக்காரர் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பதும் உலக அளவில் அதானி 14வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானிக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால் அவரது சொத்து மதிப்பு கூடியது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது உண்டு.